கட்டளைகளுக்கு இடையேயான மேசைபந்து போட்டித் தொடர் - 2024 வெற்றிகரமாக முடிவடைந்தது

கட்டளைகளுக்கு இடையேயான மேசைபந்து போட்டித் தொடர் - 2024 ஜூலை 02 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தின் பராக்கிரம சமரவீர ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றதுடன், 2024 ஜூலை 02 முதல் 05 வரை நடைபெற்ற ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும், பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும் மேற்கு கடற்படை கட்டளையே தழுவிக்கொண்டது.

அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய இப்போட்டித் தொடரில் 09 ஆண்கள் அணிகளும், 07 பெண்கள் அணிகளும் பங்குபற்றியதுடன், இறுதிநாள் பிரதம அதிதியாக மேற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் எம்.டி.கே.விஜேவர்தன கலந்துகொண்டார்.

இதன்படி, போட்டித்தொடரில் ஆண்களுக்கான கோப்பையை மேற்கு கடற்படை கட்டளையும் இரண்டாம் இடத்தை கிழக்கு கடற்படை கட்டளையும் வென்றதுடன், பெண்களுக்கானகோப்பையை மேற்கு கடற்படை கட்டளை தொடர்ந்து ஏழாவது முறையாகவும் (07) பயிற்சி கடற்படை கட்டளை இரண்டாம் இடத்தையும் வென்றது.

மேலும், சிறந்த எழுச்சி வீரருக்கான கோப்பையை கிழக்கு கடற்படை கட்டளையின் லெப்டினன்ட் டி.எம்.சி.ஏ ஜெயசேகர வென்றார்.

மேலும், கடற்படை விளையாட்டுப் பணிப்பாளர் வருண பெர்டினான்ட்ஸ், கடற்படை கட்டளை அதிகாரி (வெலிசர) கொமடோர் பிரசாத் ஜயசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழுவும் இதில் கலந்துகொண்டனர்.