12வது பாதுகாப்பு சேவைகள் கால்பந்து போட்டித்தொடரில் மகளிர் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

இலங்கை இராணுவத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட 12வது பாதுகாப்பு சேவைகள் கால்பந்துப் போட்டித்தொடர் 2023 மே 03 முதல் 22 வரை கொழும்பு குதிரைபந்தய மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் கடற்படை மகளிர் கால்பந்து அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் கடற்படை ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை வென்றது.

அதன்படி கடற்படை மகளிர் கால்பந்து அணிக்கும் இராணுவ மகளிர் கால்பந்து அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் கடற்படை மகளிர் கால்பந்து அணி 02:00 கோல்கள் என தீர்க்கமான வெற்றியை பெற்று ஒட்டுமொத்த போட்டியின் மகளிர் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மேலும், கடற்படை ஆண்கள் கால்பந்து அணிக்கும் இராணுவ ஆண்கள் கால்பந்து அணிக்கும் இடையிலான போட்டியை 01:02 என்ற கோல்களால் முடிவுக்கு கொண்டுவந்து போட்டியில் கடற்படை ஆண்கள் கால்பந்து அணி இரண்டாம் இடத்தையும் கைப்பற்றியது.