‘Navy Cup Sailing Regatta - 2023’ காலி முகத்திடலில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

‘Navy Cup Sailing Regatta - 2023’ பாய்மர படகுகள் போட்டித்தொடர் 2023 ஏப்ரல் மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் காலி முகத்திடலில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 2023 ஏப்ரல் 23 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இலங்கை பாய்மர படகுகள் சங்கத்தின் (Yachting Association of Sri Lanka – YASL) மேற்பார்வையின் கீழ் Optimist Class, ILCA 4 Class, ILCA 6 Class, ILCA 7 Class, Wind Surfing, Enterprise Class மற்றும் GP 14 Class என ஏழு (07) பிரிவுகளின் கீழ் இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டித்தொடருக்காக, கடற்படை பாய்மர படகுகள் பிரிவு, ரோயல் கொழும்பு கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி, மகளிர் கல்லூரி, மெதடிஸ்ட் கல்லூரி, Benthota Wind Surfing Club, Ceylon Motor Yacht Club, Future Fibres, Royal Colombo Yacht Club மற்றும் Ruhunu Sailing ஆகிய விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 73 வீர வீராங்கனைகள் இந்த போட்டித்தொடரில் கலந்து கொண்டுள்ளதுடன் 48 படகுகளும் இந்த போட்டித்தொடருக்காக இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ILCA 6 பிரிவின் தங்கப் பதக்கத்தை கடற்படை வீர்ர் பீடீடீஎஸ் ராஜபக்ஷ வென்றதுடன், அதன் வெண்கலப் பதக்கத்தை கடற்படை வீர்ர் கேசீ டி சில்வா வென்றார்.

ILCA 7 பிரிவின் தங்கப் பதக்கத்தை கடற்படை வீர்ர் ஜே.எஸ்.செனவிரத்னவும், வெள்ளிப் பதக்கத்தை கடற்படை வீர்ர் யு.டி.ராஜபக்ஷவும், வெண்கலப் பதக்கத்தை கடற்படை வீர்ர் கேஜீசீயூஎஸ் பண்டாரவும் வென்றனர்.

Wind Surfing பிரிவில் தங்கப் பதக்கத்தை கடற்படை வீர்ர் கே.பீ.பீ. குணவர்தனவினாலும், அதன் வெண்கலப் பதக்கத்தை டப்.ஏ.எஸ்.வீரதுங்கவும் வென்றனர்.

Enterprise பிரிவில் தங்கப் பதக்கத்தை கடற்படை வீர்ர் ஏஎம்டீபீ அத்தநாயக்க மற்றும் கடற்படை வீர்ர் கேஎஸ்கே டி சில்வா வென்றனர், அதன் வெள்ளிப் பதக்கத்தை கடற்படை வீர்ர் ஜேஎச்எம்பிஐ ஜெயபத்ம மற்றும் கடற்படை வீர்ர் ஜேஎஸ்ஐகே செனரத்வினாலும் வெண்கலப் பதக்கத்தை கடற்படை வீர்ர் ஜேஎச்டிசி அப்புஹாமி மற்றும் கடற்படை வீர்ர் கேவிஎன் கித்சிரி ஆகியோர் வென்றனர்.

GP 14 பிரிவில், தங்கப் பதக்கத்தை கடற்படை வீர்ர் ஜே.எம்.பி.எல் ஜயசூரிய மற்றும் கடற்படை வீர்ர் ஏ.எஸ்.கே. டி சொய்சா பெற்றுள்ளதுடன் வெள்ளிப் பதக்கத்தை கடற்படை வீர்ர் எஸ்.பி.பி.என்.குமார மற்றும் கடற்படை வீர்ர் எல்.ஏ.சி.எம்.குணதிலக வென்றுள்ளனர். இப்போட்டியின் வெண்கலப் பதக்கத்தை கடற்படை விர்ர் டி.பி.ஏ.டி.ஆர். குமார மற்றும் ஜேபிஎஸ் டி சில்வா ஆகியோர் வென்றனர்.

Single Handed Open Championship (All Laser Classes) தங்கப் பதக்கத்தை கடற்படை வீர்ர் கே.ஜி.சி.யு.எஸ். பண்டாரவும், வெள்ளிப் பதக்கத்தை கடற்படை வீர்ர் ஜே.எஸ். செனவிரத்னவும், வெண்கலப் பதக்கத்தை கடற்படை வீர்ர் யு.டி. ராஜபக்ஷவும் வென்றனர்.

Double Handed Open Championship (Enterprise Class) தங்கப் பதக்கத்தை கடற்படை வீரர் ஜே.எம்.பீ.எல் ஜெயசூரிய மற்றும் கடற்படை வீர்ர் ஏ.எஸ்.கே. டி சொய்சா வென்றுள்ளதுடன் வெள்ளிப் பதக்கத்தை கடற்படை வீர்ர் ஜே.எச்.எம்.பி.ஐ ஜயபத்ம மற்றும் கடற்படை வீர்ர் ஜே.எஸ்.ஐ.கே. செனவிரத்ன வென்றதுடன் வெண்கலப் பதக்கத்தை கடற்படை வீர்ர் ஏ.எம்.ஜே.பி அத்தநாயக்க மற்றும் கடற்படை வீரர் ஜே.எஸ்.கே த சில்வா வென்றனர். இப்போட்டித் தொடரின் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவுக் கோப்பையை இலங்கை கடற்படை படகோட்டம் அணி வென்றது.

இப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா முதலில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் கருத்து தெரிவித்த அவர் விளையாட்டு ஆர்வத்துடன் சிறந்த தலைவராக அறியப்பட்ட மறைந்த அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவின் நினைவாக இலங்கை கடற்படையால் இந்த பாய்மரப் போட்டித்தொடர் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், பாய்மரப் படகுகளைக் கையாள்வதில் தேர்ச்சி பெறுவதன் மூலம், ஒருவர் தனது வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளலாம், கடினமான சூழ்நிலைகள் மற்றும் சவால்களைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறலாம், மேலும் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் சவால்களை சமாளிக்க இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் மறைந்த அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவின் அன்பு மனைவி திருமதி மோனிகா பெர்னாண்டோ, முன்னாள் கடற்படைத் தளபதிகள், பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கடற்படை படகோட்டம் கழக அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.