‘DHAKA MARATHON - 2023’ இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனி சுஜானி மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
2023 ஜனவரி 20 ஆம் திகதி பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 42 கிலோ மீட்டர் மற்றும் 195 மீட்டர் தூர ‘DHAKA MARATHON - 2023’ மகளிர் மராத்தான் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனி சுஜானி மதுமாலி பெரேரா குறித்த போட்டியை 02 மணி 48 நிமிடம் 22 வினாடிகளில் முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், இலங்கை கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெரும் புகழைக் கொண்டு வந்தார்.
2022 ஆம் ஆண்டில் கம்பஹாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் 42 கிலோமீற்றர் மற்றும் 195 மீற்றர் தூரத்தை 02 மணித்தியாலங்கள் 49 நிமிடங்கள் 15 வினாடிகளில் பூர்த்தி செய்து இலங்கை வீராங்கனை ஒருவர் இதுவரை எட்டிய இரண்டாவது சிறந்த நேரத்தைப் பதிவுசெய்து அவர் ‘DHAKA MARATHON - 2023’ போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இதன்படி, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று பெண் வீராங்கனைகள் உட்பட தெற்காசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல வீராங்கனைகள் கலந்துகொண்ட இப் போட்டியில் 42 கிலோமீற்றர் 195 மீற்றர் தூரத்தை 02 மணித்தியாலம் 48 நிமிடங்கள் 22 வினாடிகளில் பூர்த்தி செய்த கடற்படை வீராங்கனி சுஜானி மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெரும் புகழைக் கொண்டு வந்தார். மேலும் இந்த மாரத்தான் ஓட்டத்தை முடித்த நேரம், சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியொன்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் பெற்ற மூன்றாவது சிறந்த நேரமாகும்.
மேலும், 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்ற தெய்வீக மரதன் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார், மேலும் அந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை அணி தாய்நாட்டிற்காக வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
மேலும், 2009 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படை தடகள அணியை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீராங்கனி சுஜானி மதுமாலி பெரேரா, இதற்கு முன்னர் பாதுகாப்பு சேவைகள் மற்றும் தேசிய நீண்ட தூர ஓட்டம், மரதன் போட்டிகள் மற்றும் அவரது தடகள நீண்ட தூர ஓட்டப் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். அவர்களின் தொடர்ச்சியான சாதனைகளுக்காக 2019 ஆம் ஆண்டில் கடற்படை வண்ணங்களை வென்றுள்ளார்.