12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடர் ஆரம்பமானது
12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்னவின் தலைமையில் 2022 ஒக்டோபர் 19 ஆம் திகதி பனாகொட இராணுவ முகாமின் புதிய உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு சாதனைகளை தாய்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு முப்படை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் விளையாட்டு வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்குகின்றனர்.
அதன்படி, பன்னிரண்டாவது முரையாக நடைபெறுகின்ற 2022/2023 பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுப் போட்டித்தொடர் மூலம் முப்படைகளில் திறமையான புதிய விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும், அதன் மூலம் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தவும் வாய்ப்பளிக்கும்.
இலங்கை கடற்படை விளையாட்டுச் சபையின் தலைவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், இலங்கை கடற்படையின் விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காக, கடற்படை பல வசதிகள் மற்றும் நலன்புரி ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, கடற்படை விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுப் வீராங்கணிகள் பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர், இது அவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பங்கு பெறுவதற்கு ஒரு நல்ல ஊக்கமாக இருக்கும்.
இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, முப்படைகளின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் விளையாட்டு வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.