EXTREME SHOT GUN CHALLENGE / IPSC SHOT GUN NATIONALS - 2022 போட்டித்தொடரில் பல வெற்றிகள் கடற்படை பெற்றது
தேசிய துப்பாக்கி சங்கம் மற்றும் ஸ்கார்பியன் விளையாட்டுக் கழகம் இணைந்து மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த Extreme shot Gun Challenge மற்றும் IPSC Shot Gun Nationals போட்டித்தொடர் - 2022 ஆகஸ்ட் 26 முதல் 28 வரை பானலுவ இராணுவ துப்பாக்கிச் சூடு தளத்தில் இடம்பெற்றதுடன் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி, இப் போட்டித் தொடரில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் அங்கு பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.
இலங்கை கடற்படை, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 158 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டித்தொடரில் இலங்கை கடற்படை வீராங்கனைகள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதன்படி, போட்டித்தொடரில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை வீராங்கனை, பெண் தலைமை சிரு அதிகாரி சஞ்சீவனி ரோட்ரிகோ Standard Division மகளிர் போட்டி பிரிவின் கீழ் ஒட்டுமொத்த போட்டித்தொடரில் தங்கப் பதக்கத்தையும், நடுவர் பிரிவில் தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளதுடன் இதே பிரிவில் ஒட்டுமொத்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை சாதாரண பெண் மாலுமி மதுவந்தி ரணசிங்க வென்றார்.
இதற்கு மேலதிகமாக, Standard Manual Division பிரிவின் கீழ் ஒட்டுமொத்த போட்டித்தொடரில் வெண்கலப் பதக்கத்தையும் குறித்த பிரிவின் Shoot off போட்டியில் தங்கப் பதக்கத்தையும் கடற்படை வீரர் திலான் தனுஷ்க பெற்றுள்ளதுடன் இதே பிரிவில் ஒட்டுமொத்த போட்டித்தொடரில் இரண்டாவது இடத்தை கடற்படை அணி பெற்றது.
மேலும், துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சிறந்து விளங்கும் பல வீர, வீராங்கனைகளை கடற்படையால் உருவாக்க முடிந்தது. அந்தவகையில், கடந்த வருடம் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான துப்பாக்கிப் சுடு போட்டியில் இலங்கை சார்பாக பெண் சிரு அதிகாரி (சமிக்ஞை) டெஹானி எகொடவெல கலந்து கொண்டார்.