இலங்கை கிரிக்கெட் நிருவனம் 2021 ஏப்ரல் 02 அன்று வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்டர் கிளப் மகளிர் முதல் பிரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டு 'விக்கெட் வித்தியாசத்தில் இராணுவ' ஏ 'அணியை தோற்கடித்தது.

">

இன்டர் கிளப் மகளிர் முதல் பிரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரில் சாம்பியன்களாக கடற்படை வெற்றி பெற்றது

இலங்கை கிரிக்கெட் நிருவனம் 2021 ஏப்ரல் 02 அன்று வெலிசர கடற்படை கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்டர் கிளப் மகளிர் முதல் பிரிவு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டு 'விக்கெட் வித்தியாசத்தில் இராணுவ' ஏ 'அணியை தோற்கடித்தது.

லீக் முறையின் கீழ் நடைபெற்ற இந்த போட்டித்தொடருக்காக தீவின் விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு மகளிர் அணிகள் பங்கேற்றன. இங்கு இலங்கை கடற்படை மகளிர் கிரிக்கெட் அணி விழையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. கடற்படை பெண்கள் அணி 33 புள்ளிகளுடன் புள்ளிகள் அட்டவணையில் முன்னிலை வகித்ததுடன், இலங்கை இராணுவத்தின் 'ஏ' அணியை இறுதிப் போட்டியில் தோற்கடித்து போட்டித்தொடரை வென்றனர்.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இராணுவ 'ஏ' அணி 50 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்கள் இழப்புக்கு 138 ஓட்டங்கள் பெற்றது. அதற்கு பதிலளித்த இலங்கை கடற்படை மகளிர் கிரிக்கெட் அணி 48 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் பெற்றது. இறுதிப்போட்டியில் ,சஷிகலா சிரிவர்தன 43 ஓட்டங்கள், ஹர்ஷனி விஜெரத்ன 21 ஓட்டங்கள், உதேஷிகா பிரபோதணி ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்கள் பெற்றதுடன் பந்துவீச்சு துறையில் இனோகா ரணவீர 27/04, சஷிகலா சிரிவர்தன 26/02, சத்யா சந்தீபனி 26/02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.