பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது
2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 11 ஆவது பாதுகாப்புச் சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரில் சிறந்து விளங்கிய இலங்கை கடற்படை பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றது. போட்டியின் முடிவில், பரிசு வழங்கும் விழா 2021 மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாராஹேன்பிட இலங்கை இராணுவ டென்னிஸ் மைதானத்தில், கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் நடைபெற்றது.
2021 மார்ச் 13 முதல் 20 வரை நாராஹேன்பிட இலங்கை இராணுவ டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் போட்டித்தொடருக்காக அணி நிகழ்வுகள், திறந்த பிரிவு, 45 க்கும் மேற்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர், 50 க்கும் மேற்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியாளர்கள் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை பிரதிபலித்து பங்கேற்றனர்.
இலங்கை கடற்படை திறந்த ஒற்றையர் பிரிவில் 01 தங்கப் பதக்கத்தையும், திறந்த இரட்டையர் பிரிவில் 02 தங்கப் பதக்கங்களையும், 45 ஒற்றையர் பிரிவில் 01 தங்கப் பதக்கத்தையும், 01 வெள்ளிப் பதக்கத்தையும், அதன் இரட்டையர் பிரிவில் 02 தங்கப் பதக்கங்களையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றது. மேலும், கடற்படை 50 க்கும் மேற்பட்ட ஒற்றையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றது, அதே நேரத்தில் இரட்டையர் பிரிவில் 02 தங்கப் பதக்கங்களையும் பெற்றது.
போட்டியின் அனைத்து நிகழ்வுகளிலும் கடற்படை 09 தங்கப் பதக்கங்களை வென்றது. மேலும், கடற்படை நான்கு வெள்ளிப் பதக்கங்களையும், இராணுவம் மூன்று வெள்ளி பதக்கங்களையும், விமானப்படை இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்றது. அதன்படி, கடற்படை மொத்தம் 57 புள்ளிகளுடன் 2021 பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் இராணுவம் 42 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் வென்றது.
கடற்படைத் தளபதி தலைமையில் இடம்பெற்ற இந்த பாதுகாப்பு சேவைகள் டென்னிஸ் போட்டித் தொடரில் பரிசு வழங்கும் விழாவில் கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, பணிப்பாளர் நாயகம் நபர்கள் ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, கடற்படை விளையாட்டு இயக்குநர், கொமடோர் ஏ.எஸ்.எல் கமகே உட்பட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.