இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட கைப்பந்து மைதானம் திறக்கப்பட்டுள்ளது.
வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய கைப்பந்து மைதானம் 2020 ஆகஸ்ட் 08 அன்று வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது.
வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக, கட்டளைத் சிவில் பொறியாளர் துறை மற்றும் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிருவனத்தின் கடற்படை வீரர்களினால் கட்டபட்ட இந்த கைப்பந்து மைதானம் பகல் மற்றும் இரவு நேரங்களில் விளையாடுவதுக்கான நவீன ஒளி அமைப்புவுடன் மற்றும் கைப்பந்து போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்கு இணங்க நிர்மாணிக்கப்பட்டன. புதிய கைப்பந்து மைதானத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்படை மற்றும் இராணுவ கைப்பந்து அணிகளுக்கு இடையே ஒரு கண்காட்சி கைப்பந்து போட்டியொன்றும் நடைபெற்றது, மேலும் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் காவல்துறையின் மூத்த அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள பல பாடசாலை மற்றும் விளையாட்டு அணிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட தேசிய அளவிலான பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் இந்த புதிய வசதிகள் கொண்ட உயர்மட்ட மைதானத்தை பெரிதும் பாராட்டினர்.