விளையாட்டு செய்திகள்

கிழக்கு கடற்படை கட்டளையில் கட்டளைகளுக்கு இடையிலான டிரையத்லான் போட்டி - 2025 வெற்றிகரமாக நிறைவடைந்தது

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவின் தலைமையில், கடற்படை கப்பல்துறை மற்றும் சாண்டி பே கடற்கரைப் பகுதியில், கட்டளைகளுக்கு இடையிலான டிரையத்லான் போட்டி 2025 நவம்பர் 08, அன்று நடைபெற்றதுடன், பயிற்சி கட்டளையானது ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது.

12 Nov 2025

கட்டளைகளுக்கிடையேயான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித்தொடர் இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

கட்டளைகளுக்கிடையேயான நீச்சல் மற்றும் நீர் பந்து போட்டித்தொடர் 2024 நவம்பர் 04 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நடைபெற்றதுடன், மேலும் ஆண்களுக்கான நீச்சல் சாம்பியன்ஷிப்பை கடற்படை ஏவுகணைக் கட்டளையும் பெண்களுக்கான நீச்சல் சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளையும் ஆண்கள் நீர் பந்து சாம்பியன்ஷிப்பை கிழக்கு கடற்படை கட்டளையும், பெண்கள் நீர் பந்து சாம்பியன்ஷிப்பை பயிற்சி கட்டளையும் வென்றன.

12 Nov 2025

கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டித்தொடர் வெலிசரவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டித்தொடர் – 2023 வெலிசர இ.க.க கெமுனு நிறுவனத்தின் கமாண்டர் பராக்கிரம சமரவீர உள்ளக விளையாட்டரங்கில் 2023 அக்டோபர் 24 முதல் 30 வரை நடைபெற்றதுடன், இதில் கடற்படை ஏவுகணை கட்டளை ஆண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், மேற்கு கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது.

12 Nov 2025

இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் - 2025 இல் தாய்நாட்டிற்காக பதக்கங்களை வெல்வதில் கடற்படை விளையாட்டு வீரர்கள் பங்களிப்பு செய்தனர்

தெற்காசிய பிராந்திய நாடுகளின் பங்கேற்புடன் 2025 அக்டோபர் 24 முதல் 26 வரை இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை விளையாட்டு வீரர்கள் தாய்நாட்டிற்காக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெல்வதற்கு பங்களித்தனர்.

04 Nov 2025

9வது கடற்படை திறந்த துப்பாக்கி சுடும் போட்டியில், கடற்படை ஏராளமான வெற்றிகளைப் பெற்றது

9வது கடற்படை திறந்த துப்பாக்கி சுடும் போட்டி - 2025, வெலிசர கடற்படை துப்பாக்கி சுடும் வளாகத்தில் 2025 அக்டோபர் 16 முதல் 28 வரை நடைபெற்றது, இதில் இலங்கை கடற்படை துப்பாக்கி சுடும் அணியானது பல வெற்றிகளைப் பெற்றது.

31 Oct 2025

2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டியில், இலங்கை கடற்படை கட்டளை மற்றும் தெற்கு கடற்படை கட்டளை அணிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சாம்பியன்ஷிப்பை வென்றது

2025 ஆம் ஆண்டுக்கான கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டித்தொடர் 2025 அக்டோபர் 03 முதல் 08 வரை வெலிசரவில் உள்ள கமாண்டர் பராக்கிரம சமரவீர நினைவு உட்புற விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றதுடன், இதில் ஆண்கள் சாம்பியன்ஷிப்பை கடற்படை கட்டளையும், பெண்கள் சாம்பியன்ஷிப்பை தெற்கு கடற்படை கட்டளையும் வென்றன.

14 Oct 2025

13வது பாதுகாப்பு சேவைகள் மோட்டார் சைக்கிள் பந்தய போட்டியில் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை வெங்கலப் பதக்கத்த பெற்றது

13வது பாதுகாப்பு சேவைகள் பந்தய போட்டித்தொடரில் 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி சாலியபுர இராணுவ பந்தய மைதானத்தில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை Racing 125 CC மோட்டார் சைக்கிள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

17 Sep 2025

TAEKWONDO POOMSAE CHAMPIONSHIP 2025 இல் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றது

இலங்கை டேக்வாண்டோ கூட்டமைப்பு ஏற்பாடு செய்த, 2025 செப்டம்பர் 06 ஆம் திகதி நடைபெற்ற TAEKWONDO POOMSAE CHAMPIONSHIP 2025 இல் கடற்படை சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதுடன், மூன்று (03) தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் (01) மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை (02) வென்றது.

12 Sep 2025

கட்டளைகளுக்கு இடையேயான ஸ்கோஷ் சாம்பியன்ஷிப் - 2025 திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஸ்கோஷ் போட்டித் தொடர் 2025 செப்டம்பர் 02 முதல் 05 வரை திருகோணமலை கடற்படை கப்பல் துறை ஸ்கோஷ் மைதானத்தில் நடைபெற்றதுடன், இதில் மேற்கு கடற்படை கட்டளை சாம்பியன்ஷிப்பை ஆண்கள் வென்றதுடன் வட மத்திய கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றனர்.

08 Sep 2025

2025 கட்டளைகளுக்கு இடையேயான டெனிஸ் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை வென்றது

2025 ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 02 வரை திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி டெனிஸ் மைதானத்தில் நடைபெற்ற கட்டளைகளுக்கு இடையேயான டெனிஸ் சாம்பியன்ஷிப்பை - 2025' மேற்கு கடற்படை கட்டளை வென்றதுடன், இப் போட்டித் தொடரில் பயிற்சி கட்டளை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

05 Sep 2025