கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது

கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டித்தொடர் – 2023 வெலிசர இ.க.க கெமுனு நிறுவனத்தின் கமாண்டர் பராக்கிரம சமரவீர உள்ளக விளையாட்டரங்கில் 2023 நவம்பர் 06 முதல் டிசம்பர் 02 வரை நடைபெற்றதுடன் இதில் ஆண்களுக்கான சாம்பியன்ஷிப்பை பயிற்சித் கட்டளையும் பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளையும் வென்றது.

கடற்படை வீர வீராங்கனைகள் பலர் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் பயிற்சி கட்டளை ஆண்கள் அணிக்கும் வடமத்திய கடற்படை கட்டளை ஆண்கள் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் 53 - 45 புள்ளிகள் என்ற புள்ளிகள் அடிப்படையில் பயிற்சி கட்டளை அணியினர் வெற்றிபெற்று கட்டளை களுக்கிடையேயான கூடைப்பந்து போட்டித்தொடர் 2023 யின் ஆண்கள் சம்பியன் பட்டத்தை வென்றனர். அதன் இரண்டாம் இடத்தைப் வட மத்திய கடற்படை கட்டளை பெற்றுள்ளது. மேற்கு கடற்படை கட்டளை மகளிர் அணிக்கும் பயிற்சி கட்டளை மகளிர் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் 28-04 என்ற புள்ளிக்கணக்கில் மேற்கு கட்டளை மகளிர் அணி வெற்றி பெற்றது.

மேலும், இப் போட்டியில் சிறந்த வீரருக்கான வெற்றிக்கிண்ணத்தை பயிற்சி கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய அதிகாரி யூ.ஏ.டீ.வீ.எஸ் சமரசேகரவும் சிறந்த வீரருக்கான வெற்றிக்கிண்ணத்தை மேற்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய பெண் மாலுமி டி.பி.எஸ் பிரபுமாலியும் பெற்றுக்கொண்டனர். பயிற்சி கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அதிகாரி டபிள்யூஎம்டிஜி வீரகோன், போட்டியின் வளர்ந்து வரும் வீரருக்கான கிண்ணத்தை வென்றார், அதே சமயம் போட்டியின் வளர்ந்து வரும் வீராங்கனைகான கிண்ணத்தை மேற்கு கடற்படை கட்டளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் மாலுமி பி.ஐ.எஸ் பெரேரா வென்றார். மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் கோப்பயை ஏவுகணை கட்டளை பிரதிநிதித்துவப்படுத்தும் கேப்டன் ஐ.எச்.ஜே.புத்திக வென்றார்.

மேலும், கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்டப் போட்டித்தொடர் – 2023 யின் பரிசளிப்பு விழா மேற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் புத்திக ரூபசிங்கவின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கூடைப்பந்தாட்டக் குழுவின் தலைவர் தளபதி ஏ.வி.சௌதராஜா மற்றும் பல்வேறு கடற்படை கட்டளைகளின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளும் கலந்துகொண்டனர்.