நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது

இலங்கை கடற்படை, கொழும்பு துறைமுக காவல்துறையுடன் இணைந்து, 2026 பிப்ரவரி 16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் மேற்கொண்ட ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற சுமார் இரண்டாயிரம் (2000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபரை கைது செய்தனர்.

17 Feb 2026

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, 2026 பிப்ரவரி 15, அன்று இரவு மற்றும் இன்று (2026 பிப்ரவரி 16) அதிகாலை, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளை மற்றும் இருபத்தைந்து (25) இந்திய மீனவர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

16 Feb 2026

மன்னார் தெற்கு கடலில் 50 கிலோகிராமை விட அதிகமான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்திய டிங்கி படகுடன் இரண்டு 02 சந்தேக நபர்கள் கடற்படையினறால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, ”முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் முக்கிய பங்காளியாக, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு மேற்கொண்ட தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, மன்னாரின் தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) பொதிகளை கொண்டு சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் (01) ஒரு டிங்கி படகும் இன்று (2026 பிப்ரவரி 14) கடற்படையினறால் கைப்பற்றப்பட்டது.

14 Feb 2026

மாரவில கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 300 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 07 ஆம் திகதி மாரவில கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட முன்னூறு (300) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

10 Feb 2026

கிளிநொச்சி, இரணைதீவுக்கு வடக்கு கடற்பரப்பில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 07 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவின் வடக்கு கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 05 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) நபர்களையும், முன்னூற்று முப்பத்தைந்து (335) கடல் அட்டைகளுடன், இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

07 Feb 2026

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன

இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற சுமார் எழுநூற்று நாற்பத்து நான்காயிரத்து ஐநூறு (744500) மருந்து மாத்திரைகளை (Pregabalin Capsules) ஏற்றிச் சென்ற ஒரு (01) லொரியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

06 Feb 2026

மன்னார், நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது

மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் 2026 ஜனவரி 31 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் பதினேழு (17) கிலோகிராம் ஆமை இறைச்சி, முப்பத்தொன்பது (39) ஆமை முட்டைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுடன் மூன்று (03) சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Feb 2026

திருகோணமலை கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக ஆமை முட்டைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கடற்படையினர் கைப்பற்றினர்

திருகோணமலை கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் 2026 ஜனவரி 28 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று பதினேழு (117) ஆமை முட்டைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு (01) நபரை கைப்பற்றினர்.

31 Jan 2026

தலைமன்னாரில் சட்டவிரோதமாக 1158 சங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது

இலங்கை கடற்படை மன்னார் மீன்வள ஆய்வாளருடன் இணைந்து 2026 ஜனவரி 25 ஆம் திகதி தலைமன்னார், இருக்கலம்பிட்டி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அங்கீகரிக்கப்பட்ட சட்ட வரம்பை மீறி ஆயிரத்து நூற்று ஐம்பத்தெட்டு (1158) சங்குகளை சேமித்து வைத்திருந்த ஒரு (01) நபரை கடற்படையினர் கைப்பற்றினர்.

27 Jan 2026

ஹம்பாந்தோட்டை நகராட்சி மன்ற குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையின் உதவி

2026 ஜனவரி 23 அன்று, ஹம்பாந்தோட்டை நகராட்சி மன்றத்தின் குப்பை அகற்றும் இடத்தில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க தெற்கு கடற்படையின் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான காவன்திஸ்ஸவின் கடற்படைக் குழுவினரால் உதவி வழங்கப்பட்டது.

26 Jan 2026