நடவடிக்கை செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 28 ஆம் திகதி திருகோணமலை கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்தைந்து (25) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.
29 Sep 2024
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த இந்திய மீன்பிடிப் படகை மீட்க கடற்படையின் உதவி

இயந்திரக் கோளாறு காரணமாக யாழ்ப்பாணம் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த இந்திய மீன்பிடி இழுவை படகுக்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் உதவினர். 2024 செப்டம்பர் 22 அன்று படகை பரிசோதித்த பிறகு, பழுதுபார்க்கப்பட்டு குறித்த இழுவைப் படகு அதன் 05 பணியாளர்களுடன், 2024 செப்டம்பர் 23 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் இருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
24 Sep 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1318 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் தலைமன்னார் மற்றும் மன்னார் கடற்பகுதியை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகப்படும் சுமார் 1318 கிலோ 22 கிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
23 Sep 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2024 செப்டெம்பர் 21) யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் 37 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
21 Sep 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 506 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 20 ஆம் திகதி புத்தளம் மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளுக்கு அருகில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சுமார் ஐந்நூற்று ஆறு (506) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடை) கைப்பற்றினர்.
21 Sep 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 810 கிலோ கிராம் பீடி இலைகள் புத்தளத்தில் கைது

இலங்கை கடற்படையினர் புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்துடன் இணைந்து 2024 செப்டெம்பர் 19 ஆம் திகதி புத்தளம் ஆலங்குடா பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எண்ணூற்று பத்து (810) கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றினர்.
20 Sep 2024
வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 08 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் திருகோணமலை ஜின்னபுரம் கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு கர்நாடகேணி கடற்பகுதிக்கு அப்பால் கடலில் 2024 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களை கைப்பற்றினர்.
19 Sep 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 2 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி உச்சமுனை கடற்பகுதிக்கு அப்பால் 2024 செப்டெம்பர் 17 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
19 Sep 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
17 Sep 2024
சுமார் 37 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் பளை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை; பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2024 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி சாவகச்சேரி பளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, தொண்ணூற்று நான்கு (94) கிலோ ஐந்நூற்றி இருபது (520) கிராம் கேரள கஞ்சாவுடன், சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் கெப் வண்டி (01) கைது செய்யப்பட்டன.
15 Sep 2024