இலங்கை கடற்படை, 2026 பிப்ரவரி 25 ஆம் திகதி கல்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்டு, ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் எண்ணூற்று எண்பத்தி இரண்டு (882) கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டி ஒன்றையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.