நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 742 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர் 2025 நவம்பர் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு களப்பு பகுதியிலும் சிலாபத்தில் உள்ள கருகபனை களப்பு பகுதியிலும் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று நாற்பத்திரண்டு (742) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் மூன்று (03) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

12 Nov 2025