இலங்கை கடற்படை, 2025 செப்டம்பர் 18, அன்று சிலாவத்துறை, பண்டரவேலி கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஏழு (1197) கிலோகிராம் பீடி இலைகள், ஆயிரத்து எழுநூற்று அறுபத்தைந்து (1765) சவர்க்கார கட்டிகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவற்றுடன் ஒரு (01) சந்தேக நபரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்.