இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் படி, 2025 ஏப்ரல் 11ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பல் மற்றும் ஆறு (06) சந்தேக நபர்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டன. பல நாள் மீன்பிடி கப்பல் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த சுமார் 77 கிலோ 484 கிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 42 கிலோ 334 கிராம் ஐஸ் போதைப்பொருளானது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் நெடுநாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.