நடவடிக்கை செய்தி

இந்நாட்டில் நெடுநாள் மீன்பிடி படகில் பெருந்தொகை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 07 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகுடன் ஏழு (07) சந்தேகநபர்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நெடுநாள் மீன்பிடி கப்பல் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த 191 கிலோ 752 கிராம் ஹெரோயின் மற்றும் 671 கிலோ 452 கிராம் ஐஸ் போதைப்பொருளானது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் நெடுநாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

06 Apr 2025