நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் 160000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் 06ஆம் திகதி மாலை கல்பிடிய இப்பனதீவு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், குறித்த கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த டிங்கி படகொன்றில் இருந்த சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகளுடன் குறித்த டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
06 Mar 2025
பாணம பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கடற்படையினர் தொடர்ந்தும் பங்களிக்கின்றனர்
கனமழை காரணமாக பாணம பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை 2025 மார்ச் 03 அன்று, ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவம் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் நடவடிக்கைகள் நடைப்பெறுகின்றன.
06 Mar 2025


