நடவடிக்கை செய்தி

கடற்படையினரால் இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் சிலாவத்துறை, வில்பத்து, திருகோணமலை கொட்பே மற்றும் மோதர கிபுலா கால்வாய், கோவில் வீதி ஆகிய பகுதிகளில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, இருபது (20) கிராம் கேரள கஞ்சா, ஆயிரத்து ஐம்பது (1050) மில்லிகிராம் மாவா போதைப்பொருள் மற்றும் இருபத்தி ஆறு (26) கிராம் ஐஸ் போதைப்பொருள் முந்நூற்று நாற்பத்தாறு (376) மில்லிகிராம்களுடன் ஏழு (07) சந்தேகநபர்கள் கைது செய்தனர்.

21 Feb 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி 13 முதல் 19 வரை கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும், கடற்பரப்புகளிலு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடித்தல், செல்லுபடியாகும் மீன்பிடி பத்திரம் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் ஆகியவை கண்டறியப்பட்டதுடன், கடலட்டைகள் மற்றும் சங்குகளை பிடித்த பதினேழு (17) பேர், பன்னிரண்டு (12) மீன்பிடி படகுகள்,மோட்டார் சைக்கிலொன்று (01) மற்றும் நூற்று ஐம்பத்தாறு (156) சட்டவிரோத மீன்பிடி வலைகள், நூற்று எண்பத்து நான்கு (184) கடலட்டைகள் மற்றும் இருபத்தி இரண்டு (22) சங்குகளை கைது செய்யப்பட்டனர்.

21 Feb 2025