கல்பிட்டி மொஹொத்துவாரம் கடற்கரையில் மற்றும் தலைமன்னார் குடுஇருப்பு கடற்கரையில் 2021 மார்ச் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்ட பின்னர் கடற்படை நடவடிக்கைகளினால் கைவிடப்பட்ட 2221 கிலோ மற்றும் 600 கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.