நடவடிக்கை செய்தி

போதைப்பொருள் கொண்ட 04 சந்தேக நபர்கள் தெற்கு கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

காலி, தொடங்தூவ கடல் பகுதியில் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி கடற்படையினர் மேற்கொண்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கடத்திக் கொண்டு இருந்த 05 கிலோ மற்றும் 945 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine), 2 கிலோ மற்றும் 47 கிராம் ஹெராயின் மற்றம் 03 கிராம் கேரள கஞ்சா ஆகியவற்றையுடன் பல நாள் மீன்பிடி படகும் நான்கு (04) சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

01 Jan 2021