நடவடிக்கை செய்தி

கடற்படை வெள்ள நிவாரண குழுவொன்று களுத்துறை பரகொட பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலையால் பெய்த கடும் மழை காரணமாக, இன்று (2024 ஆகஸ்ட் 18) களுத்துறை மாவட்டத்தின் பரகொட பகுதிக்கு கடற்படை வெள்ள அனர்த்த மீட்புக் குழுவொன்றை (01) அனுப்பி வைக்கப்பட்டது.

18 Aug 2024

சிலாவத்துறை பண்டரவேளி பகுதியில் வைத்து போதை மாத்திரைகள் பொதியொன்று கைது

இலங்கை கடற்படையும் பொலிஸாரும் இணைந்து 2024 ஆகஸ்ட் 17 ஆம் திகதி சிலாவத்துறை, பண்டரவேளி பிரதேசத்தில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் (Pregabalin Capsules) முந்நூற்று எண்பது (380) Pregabalin கைப்பற்றப்பட்டன.

18 Aug 2024

தலைமன்னாரில் கரை ஒதுங்கிய சுமார் 208 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், தலைமன்னார் ஊறுமலை மற்றும் பழைய பாலம் கடற்கரையைஅண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருநூற்று எட்டு (208) கிலோ (ஈரமான எடை) பீடி இலைகள் கடற்படையிரால் கைது செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

14 Aug 2024

மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 09 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி கடைக்காடு கரையோரப் பகுதி மற்றும் அதற்கு அப்பாட்பட்ட கடல் பகுதியில் 2024 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட ஒன்பது (09) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றினர்.

14 Aug 2024

சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடலட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சிலாவத்துறையில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து இன்று (2024 ஆகஸ்ட் 13) காலை சிலாவத்துறை, புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வீடொன்றில் விற்பனைக்காக தயார் படுத்தப்பட்டிருந்த சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடலட்டைகள் சுமார் நானூற்று எண்பத்திரண்டு (482) தொகையுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

13 Aug 2024

இந்திய மீன்பிடிப் படகொன்று மூலம் சட்டவிரோதமாக வென்னப்புவ கடற்கரைக்கு வந்த இலங்கையர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து, வென்னப்புவ கரையோரப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்திய மீன்பிடிப் படகொன்று மூலம் வென்னப்புவ தல் தேக (கடவத்தை) பகுதிக்கு வந்து ரகசியமாக தரையிறங்க முயன்ற இலங்கையர் ஒருவர், 2024 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டார்.

11 Aug 2024

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகள் வடமேற்கு கடற்பரப்பில் வைத்து கைது

இலங்கை கடற்படை, கடலோர காவல் படையுடன் இணைந்து 2024 ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி மன்னாருக்கு தெற்கே, வடமேற்கு கடற்பரப்பில், குதிரைமலை முனையில், மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய படகுகளுடன் முப்பத்தைந்து (35) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

09 Aug 2024

கல்பிட்டி தோரயடி குளத்தில் மூழ்கி கிடந்த 04 கிலோ 740 கிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2024 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கல்பிட்டி தோரயடி குளத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களினால் குளத்தில் மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 04 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதியொன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த தங்கம் அடங்கிய பொதியை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றும் தோரயடி கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

07 Aug 2024

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகள் கைது

இலங்கை கடற்படை, கடலோர காவல் படையுடன் இணைந்து 2024 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மன்னார் தென் கடற்பரப்பில் குதிரைமலை முனையில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் இருபத்தி இரண்டு (22) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

06 Aug 2024

சுமார் 82 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2024 ஆகஸ்ட் 04 ஆம் திகதி கிளிநொச்சி, இரணைதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த தீவில் உள்ள புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருநூற்று ஏழு (207) கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டது.

05 Aug 2024