நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 552 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் நெடுந்தீவின் உறிமுனாய், வெள்ளியல் மற்றும் சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கரையோரங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் ஐந்நூற்று ஐம்பத்து இரண்டு (552) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைது செய்யப்பட்டது.
28 Aug 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்க தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் கரம்ப பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலிசார் இணைந்து 2024 ஆகஸ்ட் 27 ஆம் திகதி புத்தளம் கரம்ப பகுதியில் உள்ள வீதித் தடுப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் கெப் வண்டி மூலம் சாதனங்களை கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளார்.
28 Aug 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 1,076 கிலோ கிராமுக்கு அதிகமான பீடி இலைகளுடன் 02 டிங்கி படகுகள் மற்றும் ஒரு பாரம்பரிய படகு கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் நெடுந்தீவின் உரிமுனே கடற்கரை மற்றும் கல்பிட்டி குடாவ தடாகத்தில் 2024 ஆகஸ்ட் 28 ஆம் திகதி மற்றும் இன்று (2024 ஆகஸ்ட் 29) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த சுமார் ஆயிரத்து எழுபத்தாறு (1,076) கிலோகிராம் பீடி இலைகளுடன் (ஈரமான எடை) இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் ஒரு பாரம்பரிய படகு (01) கைப்பற்றினர்.
27 Aug 2024
வடக்கு கடற்பகுதியில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகில் இருந்த 02 மீனவர்களை கடற்படையினரால் மீட்கப்பட்டது
இலங்கைக்கு வடக்கு பகுதியில் கச்சத்தீவில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 14 கி.மீ) தொலைவில் இந்திய கடற்பரப்பில் பாதிக்கப்பட்ட இந்திய மீன்பிடி படகொன்றில் இருந்து 02 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (27 ஆகஸ்ட் 2024) மீட்டுள்ளனர்.
27 Aug 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது.
இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மன்னாருக்கு வடக்கில் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) எட்டு (08) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
27 Aug 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 748 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன
இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கல்பிட்டி உச்சமுனே இப்பந்தீவு கடற்கரைப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் மற்றும் வெள்ளமுண்தலம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 748.6 கிலோ கிராம் பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) கைது செய்யப்பட்டன.
26 Aug 2024
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 776 கிலோ பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் எழுநூற்று எழுபத்தாறு (776) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடை) கைப்பற்றுவதற்காக இலங்கை கடற்படையினர் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கல்பிட்டி கப்பலடி கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
24 Aug 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம், பேதுருதுடுவைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பதினொரு (11) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
23 Aug 2024
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் வட கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகில் இருந்த மீனவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படையின் உதவி
இலங்கைக்கு வடக்கின் பருத்தித்துறையில் இருந்து சுமார் 447 கடல் மைல் (சுமார் 827 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான இலங்கை மீன்பிடி படகொன்றில் இருந்த நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் இந்திய மீன்பிடிப் படகொன்று மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்தியாவின் சென்னை, கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு 21 ஆகஸ்ட் 2024 அன்று தகவல் அளித்துள்ளது.
22 Aug 2024
களுத்துறை பரகொட பிரதேசத்தில் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த ஒருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்
சீரற்ற காலநிலையால் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பரகொட பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். அதன் படி இன்று (2024 ஆகஸ்ட் 19,) மாலை பரகொட பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த ஒருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டார்.
19 Aug 2024