நடவடிக்கை செய்தி

கடலில் தீப்பிடித்த மீன்பிடிப் படகையும் படகில் இருந்த மீனவர்களையும் கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

தெற்கு கடல் பகுதியில் பல நாள் மீன்பிடிப் படகொன்றில் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கடற்படையினர் இன்று (2020 நவம்பர் 07) குறித்த மீன்பிடி படகு மற்றும் அதன் குழுவினரை பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு அழத்து வந்தனர்.

07 Nov 2020

சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 5711 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2020 நவம்பர் 06 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்த முயன்ற 5711 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் 06 சந்தேக நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

07 Nov 2020

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 40 நபர்கள் கடற்படையினரால் கைது

கடந்த சில நாட்களில் வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 2186 கடல் அட்டைகளுடன் 40 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

06 Nov 2020

ரூ.63 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

2020 நவம்பர் 05 ஆம் திகதி வெத்தலகேணி கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.63 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 213 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

05 Nov 2020

பானதுர கடற்கரையில் சிக்கித் தவிந்த திமிங்கலங்களை கடற்படை உதவியுடன் பாதுகாப்பாக கடலுக்கு விடுவிக்கப்பட்டது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இனைந்து பானதுர கடற்கரையில் சிக்கித் தவிந்த திமிங்கலங்களை பாதுகாப்பாக காப்பாற்றி மீண்டும் கடலுக்கு அனுப்ப 2020 நவம்பர் 02 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது.

03 Nov 2020

சுமார் 4 மெட்ரிக் டொன் உலர் மஞ்சளுடன் 16 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையாகத்தின் கடற்படை வீரர்களினால் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 4,150 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட 16 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

01 Nov 2020

ரூ .29 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடந்த வாரத்தில் கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, ரூ .29 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 98 கிலோ மற்றும் 715 கிராம் கேரளா கஞ்சா, 950 மில்லிகிராம் ஐஸ் போதைபொருளுடன் (Crystal Methamphetamine) 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

31 Oct 2020

கிழக்கு மற்றும் வடமேற்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் மூலம் 10 நபர்கள் கைது

கிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பகுதிகளில் 2020 அக்டோபர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

29 Oct 2020

சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது

2020 அக்டோபர் 15 ஆம் திகதி முதல் 2020 அக்டோபர் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

21 Oct 2020

மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கியொன்று கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டது

2020 அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் கடற்படை மற்றும் காவல்துறையினர் இனைந்து பதவிய எத்தாவெட்டுனுவெவ மற்றும் மன்னார், நானாட்டான் பகுதிகளில் மேற்கொண்ட இரண்டு சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது பல வெடிபொருட்களையும் உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டது.

20 Oct 2020