நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து இன்று (2024 செப்டெம்பர் 07) யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

08 Sep 2024

35470 போதை மாத்திரைகள் புத்தளத்தில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால், 2024 செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி மாலையில் புத்தளம், சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பத்தைந்தாயிரத்து நானூற்று எழுபது (35470) Pregabalin போதை மாத்திரைகள் (Pregabalin Capsules) கைப்பற்றப்பட்டன.

07 Sep 2024

சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2024 செப்டெம்பர் 06 ஆம் திகதி மன்னார், பேசாலை கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நூற்றி எண்பத்தி எட்டு (188) கிலோகிராம் எடையுள்ள (ஈரமான எடையுடன்) ஐந்து (05) கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றினர்.

07 Sep 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 843 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி சிலாபம் குளத்தின் மையக்குளம பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் எண்ணூற்று நாற்பத்து மூன்று (843) கிலோகிராம் பீடி இலைகள் கைது செய்யப்பட்டது.

05 Sep 2024

ஆழ்கடலில் விபத்துக்குள்ளான "நிஹதமாணி 01" என்ற பல நாள் மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட 4 மீனவர்களும் கஜபாகு கப்பல் மூலம் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டது

2024 செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி காலியில் இருந்து சுமார் 241 கடல் மைல் (501 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் தத்தளித்த "நிஹதமாணி 01" என்ற பல நாள் மீன்பிடிக் படகில் இருந்து "லசந்த 01" என்ற பல நாள் மீன்பிடிக் படகு மூலம் மீட்கப்பட்ட நான்கு (04) மீனவர்களையும் இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாகு கப்பலிடம் ஆழ்கடலில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பிறகு, மேலதிக சிகிச்சைக்காக 2024 செப்டெம்பர் 4 ஆம் திகதி காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப கடற்படையினர் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

05 Sep 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2024 செப்டம்பர் 04) யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) நாங்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

04 Sep 2024

ஐஸ் போதைப்பொருளுடன் 02 சந்தேகநபர்கள் அரிப்பு பகுதியில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2024 செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி அரிப்பு பிரதேசத்தில் நடத்திய விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முப்பத்தொரு (31) கிராம் நானூறு (400) மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று (01) கைது செய்யப்பட்டுள்ளன.

04 Sep 2024

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2024 செப்டெம்பர் 01 ஆம் திகதி கல்பிட்டி குறிஞ்சாப்பிட்டி மற்றும் சின்னகொடியிருப்பு பகுதிகளில் மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது, ஒரு (01) கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் கெப் வண்டியொன்று (01) கைது செய்யப்பட்டது.

02 Sep 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 345 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 31 ஆம் திகதி புத்தளம் எரம்புகொடெல்ல மற்றும் கப்பலடி கடற்கரை பகுதிகளுக்கு அருகில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முந்நூற்று நாற்பத்தைந்து (345) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றினர்.

01 Sep 2024

வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் 1865 கிலோகிராம் மீன்களுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று (2024 ஆகஸ்ட் 30) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து கிலோகிராம் (1865) மீன்கள் விற்பனை செய்யத் தயாராகிக்கொண்டிருந்த நபர் ஒருவருடன் (01) குறித்த மீன் பொதி கைது செய்யப்பட்டது.

30 Aug 2024