நடவடிக்கை செய்தி
10 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைது
மன்னார், வன்காலைபாடு கடற்கரை பகுதியில் 2021 மார்ச் 30 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது 33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
01 Apr 2021
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகள் கடற்படை கைப்பற்றியது
கிழக்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்படைக் கட்டளைகளின் கடற்படையினர் கடந்த 02 வாரங்களில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10219 கடல் அட்டைகளுடன் சுழியோடி உபகரனங்கள் மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
31 Mar 2021
திக்கோவிட்ட துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்தப்பட்டது
திக்கோவிட்ட, மீன்வள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல நாள் மீன்பிடிப் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த 2021 மார்ச் 29 ஆம் திகதி கடற்படை தீயணைப்பு படையணி நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
29 Mar 2021
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 54 இந்திய மீனவர்கள் 2021 மார்ச் 24 ஆம் திகதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
25 Mar 2021
71 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் இன்று (2021 மார்ச் 22) மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது 239 கிலோ மற்றும் 850 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற டிப்பர் வண்டியுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
22 Mar 2021
சட்டவிரோதமான முறையில் இந்த நாட்டிற்கு கடத்தப்பட்ட 2221 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன
கல்பிட்டி மொஹொத்துவாரம் கடற்கரையில் மற்றும் தலைமன்னார் குடுஇருப்பு கடற்கரையில் 2021 மார்ச் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்ட பின்னர் கடற்படை நடவடிக்கைகளினால் கைவிடப்பட்ட 2221 கிலோ மற்றும் 600 கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
21 Mar 2021
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற மஞ்சள் மற்றும் ஏலக்காயுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
தலைமன்னார் கடல் பகுதியில் 2021 மார்ச் 15 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 349 கிலோ கிராம் மஞ்சள் மற்றும் சுமார் 156 கிலோ கிராம் ஏலக்காய் ஆகியவையுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
16 Mar 2021
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்த நாட்டிலிருந்து குடியேற முயன்ற 24 நபர்கள் கடற்படையினரால் கைது
கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் இன்று (2021 மார்ச் 11) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 24 பேரை கடற்படை கைது செய்தது.
11 Mar 2021
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 42 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், எலுவைதீவு கடல் பகுதியில் 2021 மார்ச் 10 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 42 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சுமார் 141 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
11 Mar 2021
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 26 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கடல் அட்டைகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை 2021 மார்ச் 09 ஆம் திகதி தலைமன்னார் கடற்கரையில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 1189 கிலோ கிராம் உலர்ந்த கடல் அட்டைகளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
10 Mar 2021