நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் குடியேற முயன்ற 91 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் மாரவில பகுதியில் மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 91 நபர்கள் கைது செய்யப்பட்டனர்

08 Jun 2022

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து நிவாரணங்களை வழங்கி வருகின்றன

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று (ஜூன் 01, 2022) 13 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர். அதன்படி, கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தற்போது அந்தந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ செயல்பட்டு வருகின்றன.

02 Jun 2022

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 13 கடற்படைக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன

தீவில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று காலை (01 ஜூன் 2022) மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ள அபாய பகுதிகளுக்கு 13 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.

01 Jun 2022

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று (2022 மே 31) காலை சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு 06 கடற்படை நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.

31 May 2022

சட்டவிரோதமான முறையில் குடியேற முயன்ற 45 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 45 நபர்களுடன் (02) உள்ளூர் மீன்பிடி படகுகளை கைப்பற்றியுள்ளனர்.

28 May 2022

வெள்ள அபாயங்கள் குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பின்னணியில், மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை கடற்படை தற்போது 10 நிவாரண குழுக்களை மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பல பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளனர்.

15 May 2022

சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்.

இலங்கை கடற்படையினர், இலங்கைக்கு தெற்கு சர்வதேச கடற்பரப்பில் 2022 மே 05 ஆம் திகதி மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஏழு வெளிநாட்டு சந்தேக நபர்களை இன்று காலை (2022 மே 09) இலங்கை கடற்படை கப்பல் சயுரல மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் இந்நிகழ்வைக் கண்காணிப்பதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

09 May 2022

சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து 2022 மே 05 ஆம் திகதி இலங்கைக்கு தெற்கு சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் மூலம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஏழு வெளிநாட்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

08 May 2022

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் 04 சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் குருநகரில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 மே 05 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிக்க தயாரிக்கப்பட்ட 07 வெடிபொருட்களுடன் நான்கு (04) சந்தேக நபர்களை கைது செய்தனர்.

06 May 2022

வத்தளை, எலகந்த பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த கடற்படையினரின் உதவி

வத்தளை, எலகந்த பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மூன்று (03) துணிக்கடைகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த கடற்படையினர் இன்று (2022 மே 06) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

06 May 2022