நடவடிக்கை செய்தி
திருகோணமலை ஜெயநகர் பகுதியில் வர்த்தக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
இலங்கை கடற்படையினர் குச்சவேளி பொலிஸாருடன் இணைந்து திருகோணமலை ஜெயநகர் மற்றும் பொடுவகட்டு கடற்பகுதியில் 2023 ஜூலை 31 மற்றும் 2023 ஆகஸ்ட் 03 ஆம் திகதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 05 வர்த்தக வெடி குச்சிகள், பதினான்கு (14) வெடிபொருட்கள் மற்றும் பதினேழு (17) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
05 Aug 2023
தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 20 கடல் மைல் (சுமார் 37 கிமீ) தொலைவில், இலங்கைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில், இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட மீனவரொருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக கொண்டு செல்ல இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஆகஸ்ட் 1) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
02 Aug 2023
வத்தளை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையின் உதவி
வத்தளை, பள்ளிய வீதியிலுள்ள வீடொன்றில் இன்று (2023 ஆகஸ்ட் 01) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தை கட்டுபடுத்தி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்காக கடற்படையினர் உதவி வழங்கினர்.
01 Aug 2023
யாழ்ப்பாணம் அரியாலை கடற்கரை பகுதியில் இருந்து 51 வர்த்தக வெடி பொருட்கள் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2023 ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அரியாலை கடற்கரைப் பகுதியில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 51 வர்த்தக வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
30 Jul 2023
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினரால் கைது
புல்முடே கொக்கிளாய் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் 2023 ஜூலை 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) பேர், ஒரு டிங்கி படகு (01), சுமார் நூற்று ஐந்து (105) கிலோகிராம் எடையுள்ள மீன் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
28 Jul 2023
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் புல்முடை, கோகிளாய் கடற்பகுதியில் 2023 ஜூலை 25 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வணிக வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்தொன்பது (19) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைபற்றினர்.
26 Jul 2023
24 கிலோ கிராமுக்கும் அதிகமான மான் இறைச்சியுடன் 03 பேர் கடற்படையினரால் கைது
பானம சாஸ்திரவேளி பகுதியில் 2023 ஜூலை மாதம் 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 24 கிலோவிற்கும் அதிகமான மான் இறைச்சியுடன் மூவர் (03) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
26 Jul 2023
சுமார் 606 கிலோ கிராம் பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் கல்பிட்டி தடாகத்திற்குச் சொந்தமான மட்டத்தீவு அண்மித்த பகுதியில் 2023 ஜூலை 24 ஆம் திகதி இரவு மெற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் மிதந்த 606 கிலோ கிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கைப்பற்றினர்.
25 Jul 2023
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய பல நாள் மீன்பிடிக் படகுகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டும் நோக்கில், இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து 2023 ஜூலை 24 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய பல நாள் மீன்பிடிப் படகுகளுடன் 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
25 Jul 2023
சுமார் 28 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சா வடகடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை 23 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம், குடைரிப்பு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் மிதந்த 86 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டுள்ளது.
24 Jul 2023