நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கடல் அட்டைகள் கொண்டு செல்ல தயாராகிக்கொண்டிருந்த 02 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, குடாவ கடற்கரையில் 2023 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உலர்ந்த கடல் அட்டைகள், கொண்டு செல்ல தயாராகிக்கொண்டிருந்த இரண்டு (02) நபர்களுடன் 274 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் கெப் வண்டி யொன்று (01)கைது செய்யப்பட்டன.

11 Oct 2023

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகளை கடற்படைத் தளபதி பார்வையிட்டார்

இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுக்காக தென் மாகாணத்தின் மாத்தறை, அக்குரஸ்ஸ, திஹகொட மற்றும் கம்புறுப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு கடற்படையின் நிவாரணக் குழுக்கள் 2023 ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி முதல் அனுப்பப்பட்டதுடன், கடற்படையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (அக்டோபர் 08, 2023) மாத்தறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

08 Oct 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 2023 ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் தென் மாகாணத்தின் மாத்தறை, அக்குரஸ்ஸ, திஹகொட மற்றும் கம்புறுப்பிட்டிய பிரதேசங்களுக்கு கடற்படையின் நிவாரணக் குழுக்களை அனுப்ப கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இப்போது கடற்படையின் நிவாரணக் குழுக்கள் அப் பகுதி பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வருகின்றனர்.

06 Oct 2023

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, போல்டர் முனைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில், வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் மற்றும் நோர்வே தீவு கடற்பகுதியில் 2023 ஒக்டோபர் 03 மற்றும் 04 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை மற்றும் சட்டவிரோத மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினைந்து (15) நபர்களுடன் 04 மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.

05 Oct 2023

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை நோர்வே தீவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மற்றும் ஏறக்கண்டி பிரதேசத்தில் 2023 ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோதமான முறையில் வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு (07) பேருடன் ஒரு டிங்கி படகு (01), ஒரு லொறி வண்டி (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

03 Oct 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் வழங்கப்பட்டன

இலங்கைக்கு பாதித்த மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 2023 செப்டெம்பர் 28 ஆம் திகதி முதல் தெற்கு மாகாணத்தின் அகுரெஸ்ஸ, அத்துரலிய, தவலம மற்றும் கம்புறுப்பிட்டிய பிரதேசங்களுக்கு கடற்படை நிவாரண குழுக்களை அனுப்ப கடற்படை ஏற்பாடு செய்துள்ளதுடன் குறித்த நிவாரண குழுக்கள் தற்போது பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகள் வழங்கி வருகின்றது.

01 Oct 2023

காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது

காலி வக்வெல்ல பிரதேசத்தில் கிங் ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2023 செப்டெம்பர் 29 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

30 Sep 2023

நிலவி வரும் சீரற்ற காலநிலை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக, இலங்கை கடற்படையினர் இன்று (2023 செப்டெம்பர் 28,) தென் மாகாணத்தில் சில பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளனர்.

28 Sep 2023

சுமார் 33 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் கரைநகர் தீவில் வைத்து கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கரைநகர் தீவின் பூமட்டை கடற்கரைப் பகுதியில் 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 100 கிலோ கிராமுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா ஏற்றப்பட்ட டிங்கி படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

28 Sep 2023

15 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் தெஹிவளையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து 2023 செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) அடங்கிய பார்சலுடன் சந்தேக நபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

28 Sep 2023