நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2024 ஜூன் 18 ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் (01) நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 Jun 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 702 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

புத்தளம் தளுவ பகுதியில் 2024 ஜூன் 15 ஆம் திகதி காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 702 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

16 Jun 2024

இலங்கை பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் இரகசிய அறைகளில் மறைக்கப்பட்டுள்ள 3250 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 131 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடலோரக் காவல்படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர், தெவுந்தர இருந்து தெற்கு திசைக்கு சுமார் 356 கடல் மைல் (சுமார் 700 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமபாஹு கப்பல் மூலம் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி கப்பலுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் காலி துறைமுகத்தில் மேற்படி மீன்பிடி கப்பலை சோதனை செய்த போது குறித்த கப்பலின் கவனமாக தயாரிக்கப்பட்ட பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3250 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் 131 கிலோ 754 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் 2024 ஜூன் 15 ஆம் திகதி காலி துறைமுகத்தில் குறித்த போதைப்பொருளை பார்வையிட்டார்.

16 Jun 2024

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கைக்கு தெற்கே சுமார் 400 கடல் மைல் (740 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி கப்பலொன்று கைது செய்யப்பட்டு இன்று (2024 ஜூன் 14,) மாலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. . பல நாள் மீன்பிடிக் கப்பலில் 150 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது, தற்போது கடற்படையினர் கப்பலின் உட்புறத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

14 Jun 2024

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கடைக்காடு கடற்பகுதியில் 2024 ஜூன் மாதம் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினாறு (16) நபர்களுடன் எட்டு (08) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

13 Jun 2024

சட்டவிரோதமான முறையில் விற்பனை செயவதற்காக தயாரிக்கப்பட்ட 4600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் ராகமவில் கைது செய்யப்பட்டுள்ளார்

2024 ஜூன் மாதம் 11 ஆம் திகதி ராகம பொடிவிகும்புர பிரதேசத்தில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் ஒருவர் (01) நாலாயிரத்து அறுநூறு (4600) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டார்.

12 Jun 2024

சுமார் 24 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது

இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2024 ஜுன் 08 ஆம் திகதி யாழ்ப்பாணம் வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அறுபது (60) கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

09 Jun 2024

வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் கடற்படையின் தொடர்ச்சியான பங்களிப்பு

சீரற்ற காலநிலையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த மீட்புக் குழுக்கல் 2024 ஜூன் 07 ஆம் திகதி அனர்த்த நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தன, மேலும் அனர்த்த நிவாரணம் வழங்குவதற்காக பதின்மூன்று (13) அனர்த்த நிவாரணக் குழுக்களை நியமித்தனர்.

07 Jun 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், பாலங்களை சுத்தம் செய்தல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு கடற்படையினரால் தொடர்ச்சியாக உதவி வழங்கப்படுகின்றன

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையால் நியமிக்கப்பட்ட மீட்புக் குழுக்களால் 2024 ஜூன் 06 ஆம் திகதி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் முப்பத்தாறு (36) குழுக்கள் நிவாரணப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளன. அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கடும் மழையினால் அடித்துச் செல்லப்பட்ட எரிபொருள் தடையை சீர்செய்தல், கடுவெல ஹெட்டிகே கால்வாயில் தடையாக இருந்த பாரிய மரமொன்றை அகற்றி அதில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றும் பணிகள் மற்றும் காலி வக்வெல்ல பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றும் பணிகளை இன்று (2024 ஜுன் 06) மேற்கொண்டுள்ளனர்.

06 Jun 2024

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 52 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் திருகோணமலை, கோபால்புரம் பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில், பவுல்பொயின்ட கடற்பகுதியில், புல்முடே யான் ஓய முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடற்பகுதியில், லங்காபடுன கடற்பகுதியில் மற்றும் முல்லைதீவு அலம்பில் கடற்பரப்பில் 2024 ஜூன் 04 ஆம் திகதி முதல் இன்று (2024 ஜூன் 06) வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐம்பத்திரண்டு (52) நபர்களுடன், பத்து (10) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

06 Jun 2024