நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் ஒருதொகை கடற்படையினரால் மேற்குக் கடலில் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 17) நீர்கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதி ஊடாக சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முயன்ற சுமார் 1143 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 02 டிங்கி படகுகளுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Dec 2023
சட்டவிரோதமான முறையில் உலர் கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற 04 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினரால் 2023 டிசம்பர் 16 ஆம் திகதி அதிகாலை மன்னார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது எண்ணூற்று எட்டு (808) கிலோகிராம் உலர் கடல் அட்டைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் நான்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
17 Dec 2023
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கடற்படையினரால் கைது
சிலாவத்துறை, மன்னார் வங்காலே, யாழ்ப்பாணம் கல்முனெதுடுவ பிரதேச கடற்பகுதிகளில் மற்றும் நீர்கொழும்பு கரையோர கடற்பகுதியில் 2023 டிசம்பர் 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பதினேழு (17) நபர்களுடன் ஆறு (06) டிங்கி படகுகள், சுமார் எழுநூற்று நாற்பதி மூன்று (743) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி கருவிகள் கைப்பற்றப்பட்டன.
15 Dec 2023
வட மத்திய மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையால் நிவாரணம்
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 டிசம்பர் 03 முதல் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய பராக்கிரமபுர பகுதிக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் தற்போது அப் பகுதியில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
14 Dec 2023
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 13) காரைநகர் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் ஆறு (06) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 Dec 2023
சிலாவத்துறை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் இன்று (2023 டிசம்பர் 13,) அதிகாலை சிலாவத்துறை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரவு சுழியோடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஏழு (07) பேருடன் இரண்டு டிங்கி படகுகள் (02), எண்ணூற்று எழுபத்து நான்கு ( 874) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
13 Dec 2023
சட்டவிரோத போதை மாத்திரைகள் பொதி யொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினரால் மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் 2023 டிசம்பர் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆறாயிரம் (6,000) Pregabalin போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
13 Dec 2023
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இலங்கை கடற்படையினர் 2023 டிசம்பர் 09 ஆம் திகதி இரவு பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் இருபத்தைந்து (25) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 Dec 2023
புத்தளம் தடாகத்தில் இருந்து 04 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கத்தை கடற்படையினர் மீட்டுள்ளனர்
இலங்கை கடற்படையினரால் புத்தளம் தடாகத்தில் பத்தலங்குண்டுவ தீவிற்கு அருகிலுள்ள கடலில் 2023 டிசம்பர் 08 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தல்காரர்களால் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு (04) கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கம் அடங்கிய பார்சலொன்று கைது செய்யப்பட்டது. மெலும், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் (02) மற்றும் ஒரு டிங்கி படகும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
09 Dec 2023
சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினரால் இன்று (2023 டிசம்பர் 07) நொரோச்சோலை, சேதபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் ஆயிரத்து இருநூற்று எண்பத்தாறு (1286) கிலோகிராம் பீடி இலைகளை கெப் வண்டியொன்றில் ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
07 Dec 2023