நடவடிக்கை செய்தி
தலைமன்னார் பகுதியில் தனியார் காணியொன்றில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி
தலைமன்னார், பீயர்கம பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் 2024 பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்தி சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க கடற்படையின் தீயணைப்பு குழுவினர் உதவி வழங்கினர்.
13 Feb 2024
வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 06 பேர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், கல்முனை துடுவ கடல் பகுதியில் இன்று (2024 பிப்ரவரி 12) அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த ஆறு (06) பேர், சுமார் 774 கடல் அட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் ஒரு டிங்கி படகு (01) கைது செய்யப்பட்டன.
12 Feb 2024
1200 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
இலங்கை கடற்படையினர் மற்றும் மன்னார் பிரிவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இனைந்து 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி சிலாவத்துறை, நானட்டான் பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது ஆயிரத்து இருநூறு (1200) போதை மாத்திரைகளுடன் (Pregabalin Capsules) இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.
08 Feb 2024
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் கடலில் 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்களுடன் இரண்டு (02) இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டது.
08 Feb 2024
சட்டவிரோதமான முறையில் சங்குகள் பிடித்த 03 பேர் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது
கல்பிட்டி இப்பண்தீவு கடல் பகுதியில் 2024 ஜனவரி 25 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அங்கீகரிக்கப்பட்ட சட்ட வரம்பு இல்லாத 1856 சங்குகளுடன் மூன்று சந்தேகநபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகு கைது செய்யப்பட்டது.
26 Jan 2024
கல்பிட்டி மாம்புரி பகுதிக்கு அப்பால் கடல் பகுதியில் வைத்து பல பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினர் 2024 ஜனவரி 23 ஆம் திகதி கல்பிட்டி மாம்புரி கடற்பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, குறித்த கடற்பகுதியில் மிதந்த ஐந்நூற்று இருபது (520) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்.
24 Jan 2024
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம்,நெடுந்தீவுக்கு அப்பால் கடலில் 2024 ஜனவரி 22 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்களுடன் இரண்டு (02) இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
23 Jan 2024
1626 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 65 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
தேவுந்தர முனையிலிருந்து சுமார் 100 கடல் மைல் (சுமார் 185 கி.மீ) தொலைவில் உள்ள தெற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 65 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கொண்ட (பொதி எடையுடன்) இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்லொன்று (01) மற்றும் அதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றும் பதினொரு (11) சந்தேக நபர்களும் இன்று (2024 ஜனவரி 20) கைது செய்யப்பட்டனர்.
20 Jan 2024
சட்டவிரோதமாக 14,163 சங்குகளை வைத்திருந்த மூவர் (03) மன்னாரில் கைது
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து 2024 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி மன்னார், இருக்கலம்பிட்டி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் பதினான்காயிரத்து நூற்று அறுபத்து மூன்று (14163) சங்குகளை வைத்திருந்த மூவர் (03) கைது செய்யப்பட்டனர்.
18 Jan 2024
காலி தொடங்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது
காலி, தொடம்கொட பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே உள்ள தொடம்கொட பாலத்தில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் 2023 ஜனவரி 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
18 Jan 2024