நடவடிக்கை செய்தி
மோசமான காலநிலை காரணமாக முந்தலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 03 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து புத்தளம் பெரியகடவலை பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு வெள்ளத்தில் இருந்து மூன்று பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் இன்று (2024 மே 20) ஈடுபட்டுள்ளனர்.
20 May 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 338 கிலோ பீடி இலைகள் வடமேற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினர் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி கல்பிட்டி இப்பண்தீவ் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற சுமார் முந்நூற்று முப்பத்தெட்டு (338) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடையுடன்) கைப்பற்றினர்.
17 May 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்
இலங்கை கடற்படை; 2024 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி முல்லைத்தீவு, அம்பலன்பொக்கனே கடற்பரப்பிலும், திருகோணமலை பொடுவகட்டு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் விளைவாக சட்ட விரோதமாக மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
17 May 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்
இலங்கை கடற்படை; 2024 மே மாதம் 15ம் திகதி அன்று கிளிநொச்சி, சுண்டிக்குளம் மற்றும் கூடாரப்பு கடற்பகுதிகளிலும், மன்னார் தால்பாடு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், மின்சார விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், வணிக வெடிமருந்துகளைப் பயன்படுத்தி இரவு சுழயோடல் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தொன்பது (29) நபர்களுடன், பதினொரு (11) டிங்கிகள், இருநூற்று பத்து (210) கடலட்டைகளும் , சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மற்றும் சுழயோடல் உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
16 May 2024
சிலாவத்துறையில் கடற்படையினரால் சட்டவிரோதமான முறையில் பிடிபட்ட கடலட்டைகளுடன் 02 பேர்
இலங்கை கடற்படையினரால் 2024 மே 14 ஆம் திகதி மாலை சிலாவத்துறை, பண்டரவெளி கடற்கரைப்பகுதியில் ஒரு தேடல் நடவடிக்கை மூலம், போக்குவரத்துக்கு தயார்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோதமாக பிடிபட்ட கடலட்டைகள் சுமார் மூவாயிரத்து ஐநூறு அளவுடன் (3500) இரண்டு (02) நபர்கள், மற்றும் கெப்வண்டி ஒன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
16 May 2024
மட்டக்களப்பில் சட்டவிரோத விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 1440 மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!
இலங்கை கடற்படை மற்றும் மட்டக்களப்பு, கல்லடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு பிரதேசத்தில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு தயார்படுத்தப்பட்ட ஆயிரத்து நானூற்று நாற்பது (1440) பிரேகபலின் காப்ஸ்யூல்கள் கையிருப்புடன் சந்தேக நபர் ஒருவர் (01) மற்றும் கார் (01) கைப்பற்றப்பட்டது.
12 May 2024
சட்டவிரோதமான முறையில் தங்கம் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் கல்பிட்டியில் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்
இலங்கை கடற்படை, புத்தளம் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து 2024ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி கல்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த தங்கம் என சந்தேகிக்கப்படும் தொன்மைப் பொருட்களுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
12 May 2024
வடகடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரால் கைது
கிளிநொச்சி, கூடாரப்பு மற்றும் சலை கடற்பகுதிகளில் 2024 மே 07ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மேற்கொண்ட மற்றும் சட்டவிரோத மின்சார ஒளிகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடக்கைகள் மேற்கொண்ட பதினொரு (11) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகள், 650 கடலட்டைகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
08 May 2024
சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 120 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன
இலங்கை கடற்படையினர் 2024 மே மாதம் 04 ஆம் திகதி மாலை கல்பிட்டி உச்சமுனை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் நூற்று இருபது (120) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கைப்பற்றினர்.
05 May 2024
தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படையின் உதவி
காலி, பத்தேகம பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2024 மே 3 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்டது.
04 May 2024