நடவடிக்கை செய்தி
28 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வைத்திருந்த 02 சந்தேகநபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம் நாகர்கோவில் ஆம்பன் கடற்படை பகுதியில் இன்று (2024 ஜூன் 05,) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது எழுபது (70) கிலோகிராம்களுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை (ஈரமான எடை) எடுத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களுடன் (02) ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
05 Jun 2024
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விவசாய இரசாயனப் பொருட்கள் ஒரு தொகுதி கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினர், இலங்கை விமானப்படையின் ஆதரவுடன் 2024 ஜூன் மாதம் 4 ஆம் திகதி இரவு கல்பிட்டி, எத்தாலே எரம்புகொடெல்ல கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டுள்ள. தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விவசாய இரசாயனப் பொருட்கள் தொகுதியொன்று கைப்பற்றியுள்ளனர்.
05 Jun 2024
மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கடுமையான காலநிலைக்கு மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கு அனுப்பியுள்ள கடற்படை நிவாரண குழுக்கள் இன்று மாலை (03 ஜூன் 2024) ஆகும் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெள்ள அனர்த்தங்களில் இருந்து 102 நபர்களை மீட்டுள்ளன. சுமார் தொள்ளாயிரத்து பத்தொன்பது (919) பேருக்கு படகுகள் மூலம் அவர்களின் அன்றாட தேவைகளுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டன, மேலும் ஐம்பது (50) நிவாரண குழுக்கள் இன்னும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
04 Jun 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சந்தேகிக்கப்படும் 05 பேரும் அவர்களுக்கு உதவிய 02 பேரும் தலைமன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது
2024 ஜூன் மாதம் 02 ஆம் திகதி இரவு தலைமன்னார் ஊருமலைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு குடியேறியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து (05) இலங்கையர்கள் மற்றும் இந்த சட்டவிரோத செயலுக்கு உதவிய 02 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
03 Jun 2024
மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள்; கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காகவும் அவர்களின் அன்றாட தேவைகளுக்காகவும் படகுகள் மூலம் போக்குவரத்து வசதிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
03 Jun 2024
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த மீட்புக் குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக சிறிய படகுகள் மூலம் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
02 Jun 2024
தென் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 06 மீனவர்களும் கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்
இலங்கைக்கு தெற்கே தேவுந்தர முனையில் இருந்து சுமார் 480 கடல் மைல் (சுமார் 889 கிமீ) தொலைவில் உள்ள ஆழ் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய நிலையில் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் வெளிநாட்டுக் கப்பலொன்று மூலம் மீட்கப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகொன்றில் இருந்த 06 இலங்கை மீனவர்களும் இன்று (2024 ஜூன் 02) கடற்படையினரால் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
02 Jun 2024
மோசமான வானிலையை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில்
மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 ஜூன் மாதம் 01 ஆம் திகதி, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கல, புவக்பிட்டிய, பாலிந்தநுவர மற்றும் காலி மாவட்டத்தின் வெலிபன்ன, அக்குரஸ்ஸ மற்றும் பாணடுகம ஆகிய இடங்களுக்கு கடற்படையின் அனர்த்த நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர். தற்போது குறித்த நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
02 Jun 2024
காலி தொடம்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது
காலி, பத்தேகம பிரதேசத்தில், கிங் ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட தொடம்கொட பாலத்தில் கடும் மழை காரணமாக சிக்கிய கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2024 மே மாதம் 27 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
28 May 2024
மோசமான காலநிலையினால் மாதம்பே கடுப்பிட்டி ஓயா நிரம்பி வழிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம், மாதம்பே, கடுப்பிட்டி ஓய நிரம்பி வழிவதால் ஹேனபொல பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறித்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 மே மாதம் 26 ஆம் திகதி கடற்படையின் நிவாரணக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் தற்போது மீட்பு குழுவினர் அப்பகுதி மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
27 May 2024