நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 226 கிலோ பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டியில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் இன்று (2024 ஜூலை 17,) கல்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இருநூற்று இருபத்தி ஆறு (226) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
17 Jul 2024
சட்டவிரோதமான முறையில் 477 கிலோகிராம் உலர் மஞ்சள் கையிருப்பு கல்பிட்டியில் கடற்படையினரால் கைது
கடற்படையினர் இன்று(2024 ஜூலை 11,) கல்பிட்டி பராமுனே தீவில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதென சந்தேகிக்கப்படும் சுமார் நானூற்று எழுபத்தி ஏழு (477) கிலோகிராம் உலர் மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
12 Jul 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் வட கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படை திணைக்களம், இன்று (2024 ஜூலை 11,) அதிகாலை, யாழ் நெடுந்தீவிற்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் பதின்மூன்று (13) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Jul 2024
சட்டவிரோதமான முறையில் 1373 கிலோகிராம் உலர் மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
கடற்படையினரால் இன்று (2024 ஜூலை 10,) புத்தளம் பள்ளியவாசல்பாடு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1373 கிலோகிராம் உலர் மஞ்சளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேகநபர்கள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
10 Jul 2024
சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கடல் வழியாக ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகொன்று 05 சந்தேக நபர்களுடன் தென்கடலில் கைது
இலங்கை கடற்படையினர் 2024 ஜூலை 7 ஆம் திகதி இலங்கை கடலோரக் காவல்படைக்கு சொந்தமான சுரக்ஷா கப்பல் மூலம் தென் கடலில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பல வகை பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு சென்ற பல நாள் மீன்பிடிப் படகொன்றுடன் 05 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளனர்.
09 Jul 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 2888 கிலோகிராம் பீடி இலைகளுடன் 03 சந்தேகநபர்கள் கைது
இலங்கை கடற்படையினர் மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து மன்னார் வங்காலை பகுதியில் இன்று (2024 ஜூலை 08,) மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பத்தி எட்டு (2888) கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள், ஒரு கெப் வண்டி மற்றும் லொறி வண்டியொன்று கைது செய்தனர்.
08 Jul 2024
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாரிக்கப்பட்ட 3000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது
இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுக நகர நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பகுதியில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து இன்று (2024 ஜூலை 06,) நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்ட சுமார் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
06 Jul 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கடற்படையினரால் கைது
திருகோணமலை இரணைகேணி, நிலாவெளி, முல்லைத்தீவின் கொக்கிளாய், வெத்தலகேணியின் சளை, ஏறக்கண்டி மற்றும் திருகோணமலை எலிசபெத் முனை ஆகிய கடற்பரப்புகளில் 2024 ஜூன் 30 முதல் ஜூலை 03 வரை மேற்கொள்ளப்பட்ட தொடர் தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத வலைகள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 பேருடன் 07 டிங்கி படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
04 Jul 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்களுடன் 04 இந்திய மீன்பிடி படகுகள் வட கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், இன்று (2024 ஜூலை 01) அதிகாலை, யாழ் நெடுந்தீவிற்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய படகுகளுடன் இருபத்தைந்து (25) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
01 Jul 2024
“Devon 5” பல நாள் மீன்பிடிப் படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை விஜயபாகு கப்பல் முலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது
“Devon 5” பல நாள் மீன்பிடிப் படகில் ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் ஒருவரை விஜயபாகு கப்பல் முலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இன்று (2024 ஜூலை 01) கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
01 Jul 2024