சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளில் 16 சந்தேக நபர்களுடன் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் (2025 ஆகஸ்ட் 01 முதல் 10 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பதினாறு (16) சந்தேக நபர்களையும், ஆறு (06) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளால் யாழ்ப்பாணத்தின் சோபர் தீவு, பொடுவக்கட்டு, புறா தீவு மற்றும் வெத்திலைகேணி ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் விளைவாக, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சுழியோடி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினாறு (16) சந்தேக நபர்கள், ஆறு (06) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) படகு ஆகியன கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, கோட்பே மற்றும் யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.