இரண்டு வார காலப்பகுதியில் கடற்படை நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கைகள் மூலம் போதைப்பொருட்களுடன் 10 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை ஆகியவை 2025 ஜூலை 05முதல் 19 வரை கடுகண்ணாவ, அலதெனிய, தவுலகல, கம்பஹா, கட்டுநாயக்க, நிலாவெளி, திருகோணமலை மற்றும் மன்னார், நடுகுடா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பத்து (10) கிராம் நாற்பது (40) மில்லிகிராம் ஐஸ், பதினோராயிரத்து எண்ணூற்று அறுபது (11860) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று அறுபத்து நான்கு (264) மாத்திரைகள் மற்றும் முப்பத்து மூன்று (33) மாத்திரை போத்தல்கள், ஐந்து (05) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் குஷ் போதைப்பொருள்கள், நூற்று நான்கு (104) கிராம் கேரள கஞ்சாவுடன் பத்து (10) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ஷில்ப நிறுவனத்தின் கடற்படையினர் கடுகண்ணாவை காவல்துறையினருடன் இணைந்து, கடுகண்ணாவை பகுதியில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பத்து (10) கிராம் மற்றும் நாற்பது (40) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு (04) சந்தேக நபர்கள், அம்பகோடே பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து அலதெனிய பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரத்து நானூறு (2400) வெளிநாட்டு சிகரெட்டுகள், ஒரு சந்தேக நபர் (01) மற்றும் ஒரு மோட்டார் வாகனம் கண்டி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து தவுலகல பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது ஆறாயிரத்து முந்நூறு (6300) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் (01) மற்றும் ஒரு மோட்டார் வாகனத்தையும் கைது செய்தனர்.

மேலும், மினுவங்கொடை பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து இலங்கை கடற்படைக் கப்பல் ரங்கல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, மூவாயிரத்து நூற்று அறுபது (3160) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று அறுபத்து நான்கு (264) மாத்திரைகள், முப்பத்து மூன்று (33) வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் நாற்பத்தொரு (41) கிலோகிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா மன்னார் நடுகுடா கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, பதினெட்டு (18) பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் ஐந்து (05) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் குஷ் போதைப்பொருளை கைப்பற்ற கடற்படையினர் ஏற்பாடுகள் செய்த்துடன், திருகோணமலை நிலாவேலி, கும்புருபிட்டி பகுதியில், சர்தாபுர பொலிஸார் சிறப்புப் படையுடன் இணைந்து கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நடத்திய சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேக நபரொருவர் (01) நூற்று நான்கு (104) கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுகன்னாவ, பிலிமத்தலாவ, கொதடுவ, கொழும்பு, ஹரிஸ்பத்துவ, கண்டி மற்றும் குபுறுப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 62 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.