கல்பிட்டி கல்லடி கடல் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற 02 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 05 ஆம் திகதி கல்பிட்டி, கல்லடி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட (250 கிலோ) அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இரண்டு (02) நபர்களையும், சுமார் அறுநூற்று எழுபத்து மூன்று (673) கிலோகிராம் உலர்ந்த கடலட்டைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.

இலங்கையின் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, 2025 ஜூலை 05ஆம் திகதி கல்பிட்டி கல்லடி கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் மேற்கொண்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. குறித்த நேரத்தில், செல்லுபடியாகும் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 250 கிலோகிராம் வரம்பை விட அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற டிங்கி (01), சுமார் அறுநூற்று எழுபத்து மூன்று (673) கிலோகிராம் உலர்ந்த கடலட்டைகள் மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 49 வயதுடைய கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், இரண்டு (02) சந்தேக நபர்கள், கடலட்டைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.