கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன
இலங்கை கடற்படையினர், 2025 மே மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 108 கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) , சுமார் 2,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபரையும் மறைத்து வைக்கப்பட்டருந்த 732 கிராம் கொகேன் போதைப்பொருளானது கைப்பற்றப்பட்டது.
அதன்படி, இலங்கை கடற்படைக் கப்பல்களான வசப நிறுவனம் 2025 மே 11 அன்று ஊருமுனை கடலோரப் பகுதியில் கடற்படையினரின் நடவடிக்கைகளால் கரைக்கு கொண்டு வர முடியாததால் கைவிடப்பட்டதாக சந்தேகப்படும், கரையொதிங்கிய சுமார் 108 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இலங்கை கடற்படை ஷில்ப நிறுவனம், கம்பளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து, 2025 மே 15 ஆம் திகதி கண்டி மாஹிய்யாவ பகுதியில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் மூலம், சட்டவிரோத விற்பனைக்காகத் தயார்நிலையில் இருந்த சுமார் 2600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் குறித்த சந்தேக நபரொருவரையும் கைப்பற்றினர்.
மேலும், இலங்கை கடற்படை மகாவெலி நிறுவனம், வாகரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து, 2025 மே 18 ஆம் திகதி லங்காபடுன முற்சந்தியில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, 732 கிராம் கொகேன் போதைப்பொருளானது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
மேலும், வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிகரெட்டுகளுடன் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 732 கிராம் கொகேன் போதைப்பொருளானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஈச்சிலம்மத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.