கற்பிட்டி கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வரப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் ஏலக்காய் தொகையினை கடற்படை கைப்பற்றியது
இலங்கை கடற்படை, 2025 மே 17 ஆம் திகதி கற்பிட்டி ரோதாபாடு களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் சுமார் 320 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் சுமார் 150 கிலோகிராம் ஏலக்காய் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகைக் கைப்பற்றியது.
கடல் வழியாக நாட்டிற்குள் சட்டவிரோதமாக பொருட்களை கடத்துவதால் அரசாங்கத்திற்கு வரி வருவாய் இழப்பதால் ஏற்படும் நீண்டகால பொருளாதாரத்தில் ஏற்படும் பாதகமான தாக்கத்தைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 2025 மே 17 அன்று கற்பிட்டி ரோதாபாடு களப்பு பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, களப்பு பகுதியில் ஒரு சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அங்கு டிங்கி படகில் இருந்த கடல் வழியாக நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பன்னிரண்டு (12) பொதிகளில் பொதிச்செய்யப்பட்ட சுமார் 320 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் சுமார் 150 கிலோகிராம் ஏலக்காய் ஆகியவையுடன் (01) டிங்கி படகு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி, ஏலக்காய் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைத்தனர்.