சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 325 கிலோகிராம் பீடி இலைகளை நீர்கொழும்பு பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படை, நீர்கொழும்பு கடல் பகுதியில் 2025 மே 07 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட முந்நூற்று இருபத்தைந்து (325) கிலோகிராம் மற்றும் நான்கு (04) கிராம் (ஈரமான எடையுடன்) பீடி இலைகளை கைப்பற்றியது.
கடல் வழிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 2025 மே 07 அன்று, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கெளனி நிறுவனத்தின் சிறப்பு கப்பல் படைப்பிரிவு குழுவினால் நீர்கொழும்பு கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் மிதக்கும் 09 பொதிகள் அவதானிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அந்த நேரத்தில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 325 கிலோகிராம் நான்கு (04) கிராம் பீடி இலைகளை கடற்படை கைப்பற்றியது.
மேலும், கடற்படையினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் காரணமாக தரையிறக்க முடியாமல், கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.