129 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் வடக்கு கடல் பகுதியில் கைது

இலங்கை கடற்படையினர், வடக்கு கடல் பகுதியில் 2025 ஏப்ரல் 29 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் முந்நூற்று இருபத்தி இரண்டு (322) கிலோ எண்ணூற்று அறுபது (860) கிராம் (ஈரமான எடையுடன்) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகளுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தால் பருத்தித்துறை கடற்பரப்பில் 2025 ஏப்ரல் 29 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு டிங்கி படகுகள் பயணிப்பதைக் கவனித்து பரிசோதித்தனர். அங்கு, குறிப்பிட்ட டிங்கி படகில் இருந்து முன்னூற்று இருபத்தி இரண்டு (322) கிலோ எண்ணூற்று அறுபது (860) கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுடன் நான்கு (04) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் மதிப்பு நூற்று இருபத்தொரு (129) மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 49 வயதுக்குட்பட்ட பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த நான்கு (04) சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.