கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கைது
இலங்கை கடற்படையினர், 2025 ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கல்பிட்டி பகுதி மற்றும் அம்பாறை காவல்துறையினருடன் இணைந்து பதியதலாவ பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 751 கிராம் கேரள கஞ்சா மற்றும் 01 கிலோ 95 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி (01) கைது செய்யதனர்.
இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி கல்பிட்டி பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த 751 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் (01) மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தின் கடற்படையினர் 2025 ஏப்ரல் 24 ஆம் திகதி பதியதலாவ பகுதியில் மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 01 கிலோ 95 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் (01) மற்றும் முச்சக்கர வண்டியையும் கைது செய்தனர்.
மேலும், இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 முதல் 25 வயதுக்குட்பட்ட தலைமன்னார் மற்றும் பதியதலாவ பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுன், சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் உள்ளூர் கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டி (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி காவல்துறை மற்றும் பதியதலாவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.