லுணுகம்வெஹெரவில் உள்ளூர் கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், காவல்துறையினருடன் இணைந்து 2025 ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு திஸ்ஸமஹாராம கிரிந்த பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 01 கிலோ 800 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன், 02 சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் (01) கைது செய்யதனர்.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் காவன்திஸ்ஸ, லுனுகம்வெஹெர காவல்துறையினருடன் இணைந்து லுனுகம்வெஹெர, தேவுரம்வெஹெர பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு (02) பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் 01 கிலோகிராம் 800 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன், இரண்டு (02) சந்தேக நபர்களும் ஒரு (01) மோட்டார் சைக்கிளும் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், சந்தேக நபர்கள், உள்ளூர் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக லுணுகம்வெஹெர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.