காலி மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகில் ஏற்பட்ட தீயை அணைக்க கடற்படையின் உதவி
2025 ஏப்ரல் 14 ஆம் திகதி காலி மீன்வளத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மீன்பிடிப் படகில் ஏற்பட்ட திடீர் தீயை அணைப்பதில் தெற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த குழுவிற்கு கடற்படை உதவியது.
அதன்படி, காலி மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு மீன்பிடிக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதை இலங்கை கடற்படை கப்பல் பிரதாப அவதானித்து, தெற்கு கடற்படை கட்டளையின் சுழியோடி மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவின் கடற்படை வீரர்கள், தீப்பிடித்த படகை மற்ற படகிளிலிருந்து பிரித்து தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், பிரதாபவின் தீயை அணைக்கும் அமைப்பு செயல்படுத்தப்பட்டு, சுழியோடி மற்றும் துறைமுக பாதுகாப்புப் பணியாளர்களின் மிகுந்த முயற்சியால் படகில் ஏற்பட்ட தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.