சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 2554 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படை, நீர்கொழும்பு கலால் துறை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து, 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியிலும் மாவனெல்ல பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு மற்றும் சேமித்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐம்பத்து நான்கு (2554) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள், இரண்டு (02) லொறிகள் மற்றும் ஒரு (01) வேன் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி இரவு, நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில், நீர்கொழும்பு கலால் துறை அலுவலகத்துடன் இணைந்து மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெலனி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான லொறி (01) அப்பகுதியில் அவதானித்து சோதனையிடப்பட்டது. அங்கு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு லொறியில் கொண்டு செல்வதற்காக தயார்படுத்தப்பட்ட முப்பத்திரண்டு (32) பைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் தொள்ளாயிரத்து இரண்டு (992) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேகநபர் மற்றும் குறித்த லொறியொன்றும் (01) இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு, இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்துடன் இணைந்து, 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி அன்று மாவனெல்ல பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு ஒரு கட்டிடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் அறுநூற்று ஏழு (697) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் சுமார் எண்ணூற்று அறுபத்தைந்து (865) கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட பீடி இலைகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள், ஒரு (01) லொறி மற்றும் வேன் ஒன்றும் (01) கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 முதல் 58 வயதுக்குட்பட்ட நிட்டபுவ, வரகாபொல மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலும் கொச்சிக்கடை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கலால் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலும், மாவனெல்ல பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், பீடி இலைகள், வேன் மற்றும் லொறி ஆகியவை கேகாலை கலால் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.