சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1287 கிலோ கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால், கல்பிட்டி மாம்புரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, கடத்துவதற்காக தயார் செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று என்பத்தி ஏழு (1287) கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் லொறி ஒன்றும் 2025 ஏப்ரல் 04 கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயாவுடன் இணைக்கப்பட்ட கடற்படை மரைன் படைப்பிரிவு அதிகாலை கல்பிட்டி மாம்புரி பகுதியை உள்ளடக்கிய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், சந்தேகத்திற்கிடமான லொறி (01) அப்பகுதியில் அவதானித்து சோதனையிடப்பட்டது. அங்கு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு லொறியில் கொண்டு செல்வதற்காக தயார்படுத்தப்பட்ட முப்பத்தாறு பைகளில் (36) பொதி செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று ஏழு (1287) கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் குறித்த லொறியொன்றும் (01) இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர், பீடி இலைகள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் விஷேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.