சுமார் 69 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கையிருப்புடன் யாழ்ப்பாண வத்திராயன் கடற்கரையில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி வத்திராயன் கடற்கரைப் பகுதியில் 2025 மார்ச் மாதம் 04 ஆம் திகதி காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் இருந்த நூற்று எழுபத்து நான்கு (174) கிலோ நூற்று இருபத்தி ஆறு (126) கிராம் கேரளா கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, வட கடற்படை கட்டளையின் கடற்படை நிலைப்படுத்தல் வெத்தலக்கேணி நிறுவனம், மருதங்கர்ணி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து 2025 மார்ச் 04 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் கிளிநொச்சி வத்திராயன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில், அந்த கடற்கரையை அண்மித்த வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஏழு (07) பொதிகளை பரிசோதனைக்குற்படுத்திய பொழுது அந்த ஏழு பொதிகளில் (84) என்பத்து நான்கு பொதிகளாக பொதிச்செய்யப்பட்ட நூற்று எழுபத்து நான்கு (174) கிலோ நூற்றி இருபத்தி ஆறு (126) கிராம் கேரள கஞ்சா தொகையானது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 69 மில்லியன் ரூபாவை விட அதிகமானது என நம்பப்படுகிறதுடன், மேலும் குறித்த கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.