கொழும்பில் 3000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது
இலங்கை கடற்படையினர், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து 2025 மார்ச் மாதம் 03 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை அன்மித்த பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கைனை போது, மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டார்.
இதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் படி, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் வாகன நிறுத்துமிட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் அந்த பகுதியில் சோதனை செய்யப்பட்டுள்ளார். அங்கு குறித்த சந்தேகநபர் விற்பணை செய்வதற்காக தயார்நிலையில் வைத்திருந்த மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.